7வது சீன இறக்குமதி பொருட்காட்சி பற்றிய பரப்புரை கூட்டம்

Estimated read time 0 min read

7வது சீன இறக்குமதி பொருட்காட்சியின் வாகனங்கள் மற்றும் தொழில் நுட்பச் சாதனங்கள் காட்சியரங்குகளுக்கான பரப்புரை கூட்டம் ஏப்ரல் 8ஆம் நாள் நடைபெற்றது.

நடப்பு இறக்குமதி பொருட்காட்சியில் கையொப்பமிடப்பட்ட நிலப்பரப்பு 2 லட்சத்து 40 ஆயிரம் சதூர மீட்டரை எட்டியது. இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டியது என்று தெரிய வந்துள்ளது.


இதுவரை, நடப்புப் பொருட்காட்சிக்கான பல்வேறு ஆயத்த பணிகள் சீராக முன்னேற்றப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் இப்பொருட்காட்சியின் கௌரவ விருந்தினர் நாடாகும். வாகனங்கள் மற்றும் சாதனத் தயாரிப்புத் தொழில் துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேலான நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவலின்படி, கடந்த 6 ஆண்டுகளில், மொத்தமாக 10 ஆயிரத்துக்கும் மேலான வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் சீன இறக்குமதி பொருட்காட்சியில் கலந்து கொண்டு, 2400க்கும் மேலான புதிய உற்பத்திப் பொருட்கள், தொழில் நுட்பங்கள் மற்றும் சேவைகளை வெளியிட்டுள்ளன.

பல்வேறு நாடுகள் பரிமாற்ற மேடையை இப்பொருட்காட்சி வழங்கியதோடு, தொழில் நுட்பச் சாதனைகளுக்கான பகிர்வு மற்றும் ஒத்துழைப்புகளை முன்னேற்றி, புதிய தர உற்பத்தித் திறனின் வளர்ச்சிக்கும் ஆதரவளித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author