சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் செப்பம்பர் 11ஆம் நாள் மாலை கன்சு மாநிலத்தின் லேன்சோ நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். உள்ளூர் குடியிருப்புவாசிகளுக்கான வசதி மற்றும் சேவையை மேம்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துதல், மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கின் உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னேற்றுதல் ஆகிய நிலைமையை அவர் கேட்டறிந்தார்.
