மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடலுக்குச் செல்லத் தடை விதித்து அரசு உத்தரவு  

Estimated read time 1 min read

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அறிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கைக்குத் தென்மேற்கே வங்கக்கடலில் இந்தக் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி உள்ளது.
அதனுடன் தொடர்புடைய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியும் தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author