சக ஊழியர்களுடன் காதல்: உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம்  

Estimated read time 1 min read

அலுவலகப் பணியிடங்களில் காதல் உறவுகள் சாதாரணமாக இருந்தாலும், இந்தியாவில் இது அதிக அளவில் காணப்படுவதாக அஷ்லே மேடிசன் என்ற ரகசிய உறவுகளுக்கான தளம் நடத்திய சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.
பணியிடத்தில் காதல் உறவில் இருந்ததாக அல்லது தற்போது இருப்பதாக ஒப்புக்கொண்டவர்கள் பட்டியலில், 11 நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆய்வில் மெக்சிகோ முதலிடம் பிடித்தது. இந்தியா, அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி உட்பட 11 நாடுகளில், 13,581 பெரியவர்களிடம் YouGov உடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் தரவுகளின்படி, இந்தியாவில் பொது மக்களில் பத்தில் நான்கு பேர் (40%) தங்கள் சக ஊழியருடன் பழகியதாக அல்லது தற்போது பழகி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author