உலகிலேயே ரஷ்ய எண்ணெயை இரண்டாவது அதிகளவில் வாங்கும் நாடாக இந்தியா நீடிக்கிறது.
எரிசக்தி மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கையின்படி, அக்டோபர் மாதத்தில் இந்தியா ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 2.5 பில்லியன் யூரோக்களை (சுமார் ₹2,500 கோடி) செலவிட்டுள்ளது.
இது முந்தைய செப்டம்பர் மாதச் செலவுடன் ஒப்பிடுகையில் மாறவில்லை. அக்டோபர் மாதத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருட்களை அதிகம் வாங்கும் நாடாக இந்தியாத் தொடர்ந்து உள்ளது.
கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் எண்ணெய் பொருட்கள் ஆகியவற்றிற்கு இந்தியா மொத்தமாக 3.1 பில்லியன் யூரோக்களைச் செலுத்தியுள்ளது. இதில் கச்சா எண்ணெய்யின் பங்கு 81% ஆகும்.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் இரண்டாவது நாடாக இந்தியா நீடிப்பு
