உலக வளர்ச்சிக்கு உந்து சக்தி கொடுக்கும் சீனா

2023ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியின் உலக சேவை வர்த்தக மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

வெளிநாட்டு திறப்பு பணி, உலக பொருளாதாரத்துக்கு பங்காற்றும். இல்லாவிட்டால், வீழ்ச்சியடையும். உலக சேவை வர்த்தகம் மற்றும் சேவை தொழிற்துறையின் ஒத்துழைப்புகள் ஆழமாக்கி வளர்ந்து வருகின்றன. பொருளாதார உலகமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு, உலக பொருளாதார உயிராற்றலை மீட்பதற்கும், உலக பொருளாதார வளர்ச்சியின் உறுதிதன்மையை அதிகரிப்பதற்கும் இது உந்து சக்தி கொடுக்கும் என்றார்.

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2022ஆம் ஆண்டு, சீன சேவைத் துறையின் ஏற்றுமதி இறக்குமதி தொகை, சுமார் 6 இலட்சம் கோடி யுவானை எட்டியது. இத்தொகை கடந்த 9 ஆண்டுகளாக உலகின் 2ஆவது இடத்தில் வகித்து வருகின்றது.

உலக பொருளாதார அதிகரிப்புக்கான சீனாவின் விகிதம், 33 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது என்று சர்தவேச நாணய நிதியத்தின் தலைவர் ஜார்ஜியோவா அம்மையார் அண்மையில் தெரிவித்தார்.

சீன பாணியுடைய நவீனமயமாக்கம் முன்னேறுவதோடு, உயர் நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணியை சீனா தொடர்ந்து விரிவாக்கும். இப்போக்கில், மேலதிகமான சீன சேவை, உலக பொது மக்களுக்கு நன்மை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author