டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதும், ஹமாஸ் பாணியில் டிரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லி கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பலுசிஸ்தானில் இந்தியா ரத்தத்தை ஓடவைத்தால், செங்கோட்டை முதல் காஷ்மீரின் வனப்பகுதி வரை தாக்குதல் நடத்துவோம் என முன்பே கூறியிருந்ததாகவும், அதனை தற்போது தைரியம் மிக்க நபர்களை கொண்டு செய்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அரசியல்வாதியான அன்வருள் ஹக் தெரிவித்துள்ளார்.
