இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் வகையில், சுமார் 93 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.823 கோடி) மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் படி,
ஜாவெலின் ஏவுகணைகள்: எதிரிகளின் பீரங்கிகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட 100 ‘ஜாவெலின்’ ஏவுகணைகள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான 25 இலகுரக கட்டளை அமைப்புகள் வழங்கப்பட உள்ளன. உக்ரைன் போரில் ரஷ்ய டாங்கிகளை அழிக்க இந்த ஏவுகணைகள் பெரிதும் உதவியது குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்காலிபர் பீரங்கி குண்டுகள்: GPS தொழில்நுட்பத்துடன் துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் கொண்ட 216 ‘எக்ஸ்காலிபர்’ பீரங்கி குண்டுகளும் இதில் அடங்கும்.
இந்திய ராணுவத்திற்கு மேலும் வலுசேர்க்கும் அமெரிக்கா:ரூ.823 கோடி மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு ஒப்புதல்
