மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கார்த்தி மாத அமாவாசை தினத்தை ஒட்டி நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் அலங்கார ஊஞ்சலில் அருள்பாலித்தனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுமிச்சை பழம், தேங்காயில் தீபம் ஏற்றி அங்காளம்மனை மனமுருகி வழிபட்டனர்…
