வங்க கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  

Estimated read time 1 min read

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுவடைவதால், புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தவிர மேலும் ஒரு புதிய சுழற்சி அப்பகுதியில் நிலவி வருவதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (நவம்பர் 25) தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை புயலாக மாறினால், அதற்கு ‘சென்யார்’ (Senyar) என்று பெயரிடப்படும்.

You May Also Like

More From Author