தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல பேச்சாளருமான தமிழருவி மணியன், தற்போது தனது தலைமையில் இயங்கி வந்த காமராஜர் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அரசியலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட அவர் எடுத்த இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழருவி மணியன் தனது கட்சியை வரும் டிசம்பர் 20-ஆம் தேதி அன்று ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகாவுடன் இணைக்க உள்ளதாகவும், இது தொடர்பாக ஜி.கே.வாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். எனினும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஜி.கே.வாசன் வலியுறுத்தினால், தேர்தலில் போட்டியிடுவது குறித்துப் பரிசீலனை செய்வேன் என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
