முருகப் பெருமானை வழிபடும் போதும், முருகனுக்கு விரதம் இருக்கும் நாட்களிலும் சில குறிப்பிட்ட மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
https://youtu.be/XJdpwBbOJQ8?si=eQF5qKg0fHpJRfiI
கீழே கொடுக்கப்பட்டுள்ள முருகனுக்குரிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களை மனதார காலையிலும், மாலையிலும் சொல்லி வழிபட வேண்டும். முடிந்தவர்கள் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போது எல்லாம் இந்த மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருக்கலாம். 21 முறை, 108 முறை, 1008 முறை என இந்த மந்திரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பு. இப்படி வழிபட்டால் முருகனிடம் கேட்ட வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
முருகன் மந்திரங்களும், பலன்களும் :
* ஓம் சரவண பவ – பாதுகாப்பும், முருகன் அருளும் கிடைக்கும்.
* ஓம் ஷண்முகாய நமஹ – ஆன்மிக வளர்ச்சியும், ஞானமும் கிடைக்கும்.
* ஓம் முருகனே நமஹ – அனைத்து நலன்களும், செல்வ வளமும் கிடைக்கும்.
* வேலவா வேலவா – வெற்றி கிடைக்கும்
* ஓம் குமாராய நமஹ – ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்கும்.
* ஓம் கந்தாய நமஹ – வலிமையும் உற்சாகமும் கிடைக்கும்.
* ஓம் சுப்ரமண்யாய நமஹ – தடைகள் விலகும்.
* ஓம் வேலாயுதாய நமஹ – வேகமும், வளர்ச்சியுமண ஏற்படும்.
* ஓம் சுவாமிநாதாய நமஹ – முருகனின் கருணையும் ஆசியும் கிடைக்கும்.
* ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமஹ – அளவில்லாத பாதுகாப்பும், அருளும் கிடைக்கும்.
கந்தசஷ்டி ஸ்லோகம் :
” ஓம் நமோ பகவதே சரவணபவாய
சக்தி சண்முகாய ருத்ர குமாராய
கெளரி சுதாய சகல பூத கண சேவிதாய
அசுர குல நாசனாய ஆகர்ஷய ஆகர்ஷய
பந்தய பந்தய மாம் ரக்க்ஷ ரக்க்ஷ
ஓம் சகல ஜ்வர நிவாரணாய
சகல கஷ்ட நிவாரணாய
ஓம் சரவணபவாய ஓம் செளம்
ஸ்ரீம் அனுகிரகம் குரு குரு”
