கிரெடிட் ஸ்கோர் இனி 7 நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய ஆர்பிஐ திட்டம்  

Estimated read time 1 min read

இந்தியாவில் கடன் பெறுவோருக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில், கிரெடிட் ஸ்கோரை (Credit Score) இனிமேல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திட்டமிட்டுள்ளது.
ஏப்ரல் 2026 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வர வாய்ப்புள்ளது.
இதன் மூலம், கடன் பெறுவோர் தங்கள் நிதி நிலைமையில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பார்க்க வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை.
தற்போது மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே கிரெடிட் ஸ்கோர் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், ஆர்பிஐ வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டுதல்கள் மூலம், அனைத்துக் கடன் தகவல் நிறுவனங்களும் (CICs) மாதத்திற்கு ஐந்து முறை (7, 14, 21, 28 மற்றும் மாதத்தின் கடைசி நாளில்) கடன் தரவுகளைப் புதுப்பிக்க வேண்டும்.

You May Also Like

More From Author