உலகளவிய வறுமை ஒழிப்புக் கூட்டாளிகள் கருத்தரங்கின் 2025 கூட்டம் டிசம்பர் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், 20க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கெடுத்தனர். ஐ.நாவின் 2030ஆம் ஆண்டின் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல்கள், குறிப்பாக, வறுமை ஒழிப்பு எனும் இலக்குகள் குறித்து இதில் கலந்துகொண்டோர் விவாதித்தனர்.
மேலும், இக்கருத்தரங்கில், சீனாவின் வேளாண் தொழில் நுட்பத்தின் வெளிநாட்டு உதவி, சிறிய விவசாய குடும்பத்துக்கான சர்வதேச அமைப்புகளின் உதவித் திட்டம் உள்ளிட்ட வறுமை ஒழிப்பு முன்மாதிரிகளும் வெளியிடப்பட்டன. பல்வேறு அமைப்புகள் வறுமை ஒழிப்புப் பணி சார்ந்து மேற்கொள்ளும் புத்தாக்கம் மற்றும் நடைமுறை அனுபவங்கள் இதன் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
இக்கருத்தரங்கில் கூடுதலாக 2025 உலக வறுமை ஒழிப்பு முன்மாதிரிகள் எனும் தொகுப்பும் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பிற்குச் சீன இணையதளச் செய்தி ஊடகம், சீன சர்வதேச வறுமை ஒழிப்பு மையம், ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு முதலியவை கட்டுரைகளை வழங்கி வளர்ந்த நாடுகளுக்கு வறுமை ஒழிப்புக் கொள்கை சார்ந்த அனுபவங்களை வழங்கியுள்ளன.
