இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), ‘ பிரபலம்'(celebrity) என்ற சொல்லுக்கு புதிய வரையறை அளிக்கக்கூடிய ஒரு புதிய விளம்பர குறியீட்டை முன்மொழிந்துள்ளது.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு கலந்தாலோசனை அறிக்கையின்படி, யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) போன்ற சமூக ஊடக தளங்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்ட இணைஃப்லுயன்சர்கள் ‘பிரபலங்களாக’ வகைப்படுத்தப்படுவார்கள்.
பிராண்ட் மட்டத்தில் பிரபலங்களின் விளம்பரங்களை அனுமதிப்பதற்கான செபியின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
5 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டிருந்தால் நீங்கள் ‘செலிபிரிட்டி’: SEBI-யின் புது வரையறை
