டெங்குவுக்கு உலகிலேயே முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு பிரேசில் அங்கீகாரம்  

Estimated read time 1 min read

உலகம் முழுவதும் டெங்கு பாதிப்புகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற புட்டன்டன் நிறுவனம் உருவாக்கிய டெங்குவுக்கான முதல் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது உலக சுகாதாரத் துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
பிரேசிலின் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பான ANVISA, புட்டன்டன்-DV (Butantan-DV) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசியை 12 முதல் 59 வயதுடையவர்களுக்குப் பயன்படுத்த அங்கீகாரம் அளித்துள்ளது.
தற்போது உலகளவில் கிடைக்கும் ஒரே டெங்கு தடுப்பூசி TAK-003 ஆகும். ஆனால், அதை மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸாகச் செலுத்த வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author