ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் இலாபம் அதிகரிப்பு

 

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 27ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த இலாபத் தொகை, 5 இலட்சத்து 95 ஆயிரத்து 29 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட தரவுகளின்படி, இதே காலத்தில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் வருமானம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தவிரவும், சாதனத் தயாரிப்புத் தொழில் துறையின் இலாபம் வேகமாக உயர்ந்துள்ளதோடு, உயர் அறிவியல் தொழில் நுட்பத் தயாரிப்புத் துறையும் சீரான வளர்ச்சி முன்னேற்றப் போக்கை நிலைநிறுத்தியுள்ளது.

You May Also Like

More From Author