உலக தங்க கவுன்சில் (WGC) வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வுகளின்படி, உலகிலேயே ஒன்பதாவது பெரிய தங்க கையிருப்பு வைத்துள்ள நாடாக இந்தியா உள்ளது.
உலக அளவில் தங்கத்தை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. உலக தங்க கவுன்சிலின் தரவுகளின்படி, முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா 8,133.46 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில், 3,352 டன் தங்க இருப்புடன் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்தாலி, பிரான்ஸ் முறையே 2,451.84 டன்னுடனும், 2,436.88 டன்னுடனும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.
2,332.74 டன் தங்க கையிருப்புடன் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2,191.53 டன்னுடன் ஆறாவது இடத்தில் சீனாவும், 1,040.00 டன்னுடன் ஏழாவது இடத்தில் சுவிட்சர்லாந்தும், 845.97 டன்னுடன் எட்டாவது ஜப்பானும் உள்ளன.
இதனை அடுத்து ஒன்பதாவது, இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மொத்த தங்க கையிருப்பு 800.78 டன்னாக உள்ளது. 612.45 டன்னுடன் பத்தாவது இடத்தில் நெதர்லாந்து உள்ளது.