குவைத்திலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் ‘மனித வெடிகுண்டு’ இருப்பதாக அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் இன்று மும்பைக்கு திருப்பி விடப்பட்டது.
குவைத் நகரிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு (RGIA) வந்த இண்டிகோ விமானத்தில் ‘மனித வெடிகுண்டு’ இருப்பதாக தெரிவித்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் வந்தது.
இந்த மிரட்டலை தொடர்ந்து, விமானப் பாதுகாப்பு அதிகாரிகளும், விமான நிலைய நிர்வாகமும் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர்.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, விமானம் உடனடியாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
‘மனித வெடிகுண்டு’ மிரட்டல்: குவைத் – ஹைதராபாத் இண்டிகோ விமானம் திருப்பி விடப்பட்டது
