சபரிமலை ஐயப்பன் கோயிலில் வார விடுமுறை நாட்களில் குறைந்திருந்த பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக சபரிமலையில் பக்தர்களின் வருகை குறைந்திருந்தது.
குறிப்பாக கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி வரை 61 ஆயிரத்து 190 பேரும், ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை 50 ஆயிரத்து 264 பேரும் மட்டுமே தரிசனம் செய்தனர்.
இது 15 நாள் மண்டல பூஜை காலத்தில் மிக குறைந்த வருகை பதிவான நாளாக அமைந்தது. இந்நிலையில், திங்கட்கிழமையன்று இரவு 7 மணி நிலவரப்படி 80 ஆயிரத்து 328 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
குறிப்பாக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டதிலிருந்து 16வது நாளான நேற்று வரை மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 388 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்
