நேபாளம், பூட்டான் நாட்டு மக்களுக்குப் பாஸ்போா்ட் மற்றும் விசா அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிதாக அமலுக்கு வந்துள்ள குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேபாளம் மற்றும் பூட்டானில் இருந்து விமானம் அல்லது தரை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் இந்திய குடிமக்களுக்குப் பாஸ்போா்ட் மற்றும் விசா அவசியமில்லை.
அதேபோல், நேபாளம் மற்றும் பூட்டானைச் சோ்ந்த மக்களும் பாஸ்போா்ட் மற்றும் விசா இல்லாமல் இந்தியாவுக்குள் வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சீனா, ஹாங்காங் அல்லது பாகிஸ்தானில் இருந்து வரும் நேபாளம், பூட்டான் மக்களுக்கு இந்தச் சலுகைப் பொருந்தாது.
2015-ம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்த, பதிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழா்களுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.