அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில், ரஷ்யா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட உலகின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்ப்க்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தனர்.
Donald has fallen asleep in his own cabinet meeting. pic.twitter.com/LVZV53zxgg
— Gavin Newsom (@GavinNewsom) December 2, 2025
அந்தச் சமயத்தில், அதிபர் டிரம்ப் கண்களை மூடி தூங்கிக் கொண்டிருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டிரம்புக்கு அருகில் அமர்ந்திருந்த வெளியுறவுச் செயலாளர், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும் ஒரே தலைவர் டிரம்ப் தான் என்று பேசியபோது, அவர் தலையாட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மக்கள், 79 வயதான டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமடைந்துள்ளதையே இது காட்டுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதிபர் பதவியில் மீண்டும் போட்டியிடத் தயாராகி வரும் நிலையில், அவரது உடல் ஆரோக்கியம் குறித்து இந்த வீடியோவானது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் ஒரு தீவிரமான அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் தூங்கியது, அவரது ஆற்றல் மற்றும் கவனத்தின் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. இருப்பினும், டிரம்ப் தரப்பு இது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.
