முதலாவது மக்களின் பிரிக்ஸ் உச்சி மாநாடு துவக்கம்

முதலாவது மக்களின் பிரிக்ஸ் உச்சி மாநாடு டிசம்பர் முதல் நாள் தொடங்கி 4ஆம் நாள் வரை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறுகிறது. 21 நாடுகளைச் சேர்ந்த 150 பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியின் தலைவரும், பிரேசிலின் முன்னாள் அரசுத் தலைவருமான தில்மா ரூசெஃப் அம்மையார் துவக்க விழாவில் காணொளி வழியாக உரை நிகழ்த்திய போது, உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்புமுறையில் அரசு சாரா ஆற்றல் அதிகாரப்பூர்வமாக கலந்து கொள்வதை இந்த உச்சிமாநாடு வெளிகாட்டியுள்ளது என்று தெரிவித்தார்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பலதரப்புவாதம், பலதுருவமயமாக்க கட்டமையின் உருவாக்கம், சர்வதேச வர்த்தகத்தில் புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் அமெரிக்க டாலரின் மீதான சார்பளவு குறைப்பு, நாணயக் கையிருப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து நடப்பு உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படும்.

மேலும், பிரிக்ஸ் அமைப்பின் நடப்பு தலைமை நாடான பிரேசில் பதவிக்காலத்தில் ஏற்பாடு செய்த கடைசியான பெரிய நிகழ்வாக இந்த உச்சிமாநாடு திகழ்கிறது. அடுத்த ஆண்டு, இந்தியா பிரிக்ஸ் அமைப்பின் தலைமை நாடாகப் பதவி ஏற்க உள்ளது.

 

You May Also Like

More From Author