சீனாவின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு இலட்சியத்தின் வளர்ச்சி பற்றிய 2024ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபர அறிக்கையை சீனத் தேசிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு ஆணையம் 2ஆம் நாள் வெளியிட்டது. இதன்படி, 2024ஆம் ஆண்டில், சீனத் தேசியளவில் மருத்துவ மற்றும் சுகாதார வாரியங்களில் மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுள்ள மக்களின் எண்ணிக்கை 1015 கோடியாகும். குடிமக்களின் சராசரியான ஆயுள் காலம் 79 வயதாகும். தாய்மார்களின் இறப்பு விகிதம் ஓர் இலட்சியத்திற்கு 14.3 ஆக குறைந்துள்ளது. சிசுகளின் இறப்பு விகிதம் 4 விழுக்காடாகும்.
இவ்வறிக்கையின்படி, சீனாவின் சுகாதார மூலவளத்தின் ஒட்டுமொத்த அளவு நிதானமாக வளர்ந்து வருகிறது. 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள், சீனத் தேசியளவில் சுகாதார நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்து 93 ஆயிரத்து 551 ஆகும். இதில் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 710 ஆகும். இது, 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 355 அதிகரித்தது. 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள், சுகாதார துறையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 30 இலட்சத்து 20 ஆயிரமாகும். இது 2023ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
