சீன ஊடகக் குழுமத்தின் 2025ம் ஆண்டு நிலா விழாகலை நிகழ்ச்சி அக்டோபர் 6ம் நாள் ஒளிப்பரப்பப்பட்டது. நிகழ்ச்சியின் கதை,
அரங்கேற்றக் காட்சி, தொழில் நுட்பப் பயன்பாடு முதலிய துறைகளில் புத்தாக்க
முன்னேற்றங்கள் அடைந்தன. அது, சீனாவிலும் வெளிநாடுகளிலும் பாராட்டு பெற்றுள்ளது.
இதுவரை, நிலா விழா கலை நிகழ்ச்சி தொடர்பான
செய்திகள், சீன ஊடகக் குழுமத்தின் பல ஊடகங்களில் 140.6 கோடி பயனர்களைச்
சென்றடைந்துள்ளன. ஆயிரத்துக்கும் மேலான தலைப்புகள் இணையத்தளத்தில் பிரபலமாக விவாதிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி, உலகின் 86 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 30க்கும் அதிகமான முக்கிய
ஊடகங்களில் ஒளிப்பரப்பப்பட்டது. 5 கோடிக்கும் மேலான பார்வையாளர்கள் வெளிநாடுகளில்
சீன ஊடகக் குழுமத்தின் சேனல்கள் மூலம் இதைப் பார்வையிட்டுள்ளனர் என்று
தெரிவிக்கப்பட்டது.