சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும், துணை அரசுத் தலைவருமான ஹான் செங் ஜூலை 27ஆம் நாள் பிற்பகல் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் டோமஸ் பாஹைச் சந்தித்தார்.
ஹான் செங் கூறுகையில், ஒலிம்பிக் விளையாட்டு, உலக அமைதியைப் பேணிகாத்து, மனித குலத்தின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தைத் தூண்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போதைய சர்வதேச சூழ்நிலையில் ஒலிம்பிக் எழுச்சியை மேலும் பரவல் செய்ய வேண்டும்.
இதில் நடப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி சிறப்பு மிக்க முக்கியத்துவம் வாய்ந்தது. சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டின் வளர்ச்சியை சீனா எப்போதும் ஆதரித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் நீண்டகால சீரான உறவை நிலைநிறுத்தி வருவதாக தெரிவித்தார்.
பாஹ் கூறுகையில் பலதரப்புவாதமானது, சர்வதேச ஒலிம்பிக் இலட்சியத்தின் அடிப்படை கருத்தாகும். சர்வதேச ஒலிம்பிக் இலட்சியத்தை சீனா எப்போதும் ஆதரித்து, கரோனா நோய் பரவிய நிலைமையில், 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி, பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை செவ்வனே நடத்துவதற்கு முக்கிய அனுபவங்களை வழங்கியது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, சீனாவுடன் ஒத்துழைப்புகளை நெருக்கமாக்கி, பல்வகை சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை செவ்வனே நடத்தி, ஒலிம்பிக் எழுச்சியைப் பரவல் செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.