சீன மனித உரிமைகள் ஆய்வு சங்கம் இயற்றிய சீன மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சி பற்றிய 2025ஆம் ஆண்டு அறிக்கை அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது, 2011ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சீன மனித உரிமைகள் ஆய்வு சங்கத்தால் வெளியிடப்பட்ட 15ஆவது மனித உரிமைக்கான நீல அறிக்கையாகும்.
இதில், ஊரக வளர்ச்சியில் மனித உரிமைகளுக்கான உத்தரவாதத்தை மேம்படுத்துதல், பொது மக்களின் உணவுப் பாதுகாப்பு உத்தரவாதம், உழைப்பு உரிமைக்கான சட்ட ரீதியான பாதுகாப்பு, மருத்துவ சிகிச்சை உதவி அமைப்புமுறையை முழுமைப்படுத்துதல், அடிப்படையான பொது கல்வி சேவைகளைச் சமப்படுத்துதல், ஸ்மார்ட் கல்வி, பண்பாட்டு உரிமை உத்தரவாதத்தை ஊக்குவிக்க அறிவியல் தொழில் நுட்ப அமைப்புமுறையின் சீர்திருத்தத்தை ஆழமாக்குதல், வேலை வாய்ப்பு பெறுதலில் மகளிர்களின் உரிமைகளைப் பேணிக்காத்தல், துவக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் கொடுமைகளை தடுத்தல் உட்பட அம்சங்கள் இடம்பெற்றன. மேலும், 2024ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தில் பெறப்பட்ட புதிய முன்னேற்றங்களும் இந்த அறிக்கையில் வெளியிடப்பட்டன.
