மே 9ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் புடாபெஸ்ட் நகரில் ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர்.
அப்போது ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், இவ்வாண்டு சீன-ஹங்கேரி தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும்.
கடந்த 75ஆண்டுகளில், இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பளிப்பது, சமமாக அணுகுவது, ஒன்றுக்கொன்று நலன் அளித்து கூட்டு வெற்றி பெறுவது ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி இரு நாட்டுறவைச் சரியான திசையில் வளர்த்து வரலாற்றில் முன்பு கண்டிராத தலைசிறந்த காலத்தில் நுழைந்துள்ளோம். அரசியல் ரீதியில் ஒன்றுக்கொன்று நம்பிக்கை கொள்வது சீன-ஹங்கேரி உறவுக்கு வலுவான அடிப்படையை உருவாக்கியுள்ளது என்று நாம் கருதுகிறோம்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு ஹங்கேரியின் கிழக்கிற்குத் திறப்பு என்ற நெடுநோக்குடன் பெருமளவில் பொருத்தமானதாக உள்ளது. மேலும், இரு நாட்டுறவுக்கு ஆழ்ந்த அடிப்படை உள்ளது. மேலும், சீனா மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டுக் கலந்தாய்வு, கூட்டு கட்டுமானம் மற்றும் கூட்டு பகிர்வைப் பின்பற்றி வருகிறது.
மண்டலங்களைக் கடந்த ஒத்துழைப்புக்கும் அது முன்மாதிரியாக விளங்கியுள்ளது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
ஹங்கேரி தலைமை அமைச்சர் ஒர்பான் கூறுகையில், ஹங்கேரி-சீன உறவு ஆழ்ந்ததாகவும் நிதானமாகவும் உள்ளது. ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஹங்கேரி ஊன்றி நின்று வருகிறது.
இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பளித்து ஆதரவளித்து கூட்டு வெற்றி பெறும் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது இரு நாட்டு மக்களுக்கு நன்மை தந்துள்ளது. இன்னல்பட்ட போது சீனா ஹங்கேரிக்கு அரிய உதவியளிப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இரு நாட்டுறவை மேலும் உயர்த்தி தத்தமது நவீனமயமாக்கல் முன்னேற்றப்போக்கில் உறுதியான ஒத்துழைப்புக் கூட்டாளியாகவும் விளங்க வேண்டும் என ஹங்கேரி விரும்புவதாக ஒர்பான் தெரிவித்தார்.