சீனா மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டம் டிசம்பர் 10、11ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத்தலைவரும் மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் பங்கெடுத்து முக்கிய உரைநிகழ்த்தினார். இந்த உரையில், 2025ஆம் ஆண்டின் பொருளாதாரப் பணிகளை மதிப்பாய்வு செய்து, தற்போதைய பொருளாதார நிலைமையை ஆராய்ந்ததை தொடர்ந்து, அவர் 2026ஆம் ஆண்டிற்கான பொருளாதாரப் பணிகளை ஏற்பாடு செய்தார்.
மேலும், அடுத்த ஆண்டின் பொருளாதாரப் பணிகளின் முக்கிய கடமைகள் குறித்து இக்கூட்டத்தில் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
உள்நாட்டு தேவைகள் மேலோங்கி இருப்பதில் ஊன்றி நின்று வலிமையான உள்நாட்டு சந்தையை கட்டியமைக்க வேண்டும், புத்தாக்க இயக்காற்றலில் ஊன்றி நின்று புதிய இயக்காற்றல்களுக்கான வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும், சீர்த்திருத்தம் செய்யும்போது எதிர்கொள்ளும் இன்னல்களை தீர்ப்பதில் ஊன்றி நின்று உயர் தரமான வளர்ச்சியின் இயக்காற்றல் மற்றும் உயிராற்றலை அதிகரிக்க வேண்டும், வெளிநாட்டு திறப்புப் பணியில் ஊன்றி நின்று பல்துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறுவதை ஊக்குவிக்க வேண்டும், ஒருங்கிணைப்பு வளர்ச்சியில் ஊன்றி நின்று ஊரக மற்றும் நகரப்புற ஒருங்கிணைப்பு மற்றும் மண்டல ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும், கார்பன் உச்சநிலை மற்றும் கார்பன் நடுநிலை என்ற இலக்குகளின் வழிகாட்டலுடன் விரிவான பசுமை வளர்ச்சி முறை மாற்றத்தை முன்னேற்ற வேண்டும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை நிலைநிறுத்தி மக்களுக்கு நடைமுறைக்குரிய விஷயங்களை அதிகமாக செய்ய முயற்சிக்க வேண்டும், முக்கிய துறைகளில் உள்ள இடர்ப்பாடுகளைத் தீர்க்க செயலாக்க முறையில் பாடுபட வேண்டும் ஆகிய 8 முக்கிய அம்சங்கள் இடம்பெறுவதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
