ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 9 பேர் பலி..!!

Estimated read time 1 min read

ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள், பத்ராசலம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்ததுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது.

முதல்வர் இரங்கல்

விபத்து குறித்து ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், சித்தூர் அருகே யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. விபத்து குறித்து அதிகாரிகளிடம் பேசினேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்த விவரங்களையும் அறிந்து கொண்டேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்யும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author