அமெரிக்கா : விமான விபத்தில் முன்னாள் கார் பந்தய வீரர் உட்பட 7 பேர் பலி!

Estimated read time 1 min read

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் விமான விபத்தில் முன்னாள் NASCAR கார் பந்தய வீரர் கிரெக் பிஃபிள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வடகரோலினாவின் ஸ்டேட்ஸ்வில் பகுதியில் சிறிய ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முன்னாள் NASCAR கார் பந்தய வீரர் கிரெக் பிஃபிள், அவரது மனைவி, மகள், மகன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

கடந்தாண்டு வெள்ளத்தின் போது கிரெக் பிஃபிள் தன்னால் முடிந்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கிய நிலையில், கிரெக் பிஃபிள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You May Also Like

More From Author