வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஹைய்னானின் வளர்ச்சி வாய்ப்பு

ஹைய்னான் தாராள வர்த்தக துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவு முழுவதும் சிறப்புச் சுங்க நடவடிக்கைகள் டிசம்பர் 18ஆம் நாள், அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியுள்ளன.

உயர் வெளிநாட்டுத் திறப்பு அளவை விரிவாக்குவதற்கான சீனாவின் மன உறுதி இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தவிரவும், இது, சீனாவின் வளர்ச்சி கொண்டு வரும் நலன்களை உலகளாவிய முதலீட்டு நிறுவனங்கள் கூட்டாக பகிர்ந்துகொள்வதற்கு வாய்ப்பை வழங்கியுள்ளது.

இவ்வாண்டின் முதல் 9 திங்கள்காலத்தில், ஹைய்னானின் அன்னிய முதலீட்டு பயன்பாட்டுத் தொகை 42.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலதிகமான நாடு கடந்த நிறுவனங்கள் ஹைய்நான் மாநிலத்தில் முதலீடு செய்து தொழிலை நடத்தத் தேர்ந்தெடுக்கின்றன.

ஹைய்நான் தீவில் மேற்கொண்டு வரும் இந்நடவடிக்கை, இத்தாலியைப் பொறுத்தவரை, சீனாவின் மாபெரும் உள்நாட்டு சந்தையை உலகச் சந்தையுடன் ஒருங்கிணைக்கும் தகுநிலையாகும். சீனாவில் முதலீடு செய்வது, சுங்கவரி, வர்த்தகம், முதலீடு போன்ற சலுகை கொள்கைகளைப் பெற்றுள்ளது. தவிரவும், இதன் மூலம், சீனாவின் உள் பகுதியின் சந்தை மற்றும ஆசியான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் நுழையலாம் என்று இத்தாலியில் உள்ள சீன தொழில் மற்றும் வணிகச் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author