தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு!

Estimated read time 1 min read

சென்னை : சென்னையில் இன்று (டிசம்பர் 20, 2025, சனிக்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

இதனால் நகைப் பிரியர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.99,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.1,08,216-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.13,527-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சமீப காலங்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் தான் உள்ளது.

கடந்த வாரம் ஏற்ற இறக்கம் காணப்பட்ட நிலையில், இந்த வாரமும் அதே போக்கு தொடர்கிறது. இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.99,200-ஐ எட்டியுள்ளது, இது ஒரு லட்சத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. இது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.226-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,26,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சென்னை சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், திருமணங்கள், பண்டிகை காலங்களில் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author