தமிழ்நாடு கூட்டுறவு துறையின் சேவைகளை அறிய புதிய செயலி அறிமுகம்  

மலிவு விலையில் மருந்துகள் உள்ளிட்ட தமிழக கூட்டுறவுத் துறையின் பல்வேறு சேவைகளை ஆன்லைனில் பெற கூட்டுறவு என்ற பெயரில் ஒரு புதிய செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய தலைமை அலுவகத்தில் கூட்டுறவுத் துறையின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர் பெரிய கருப்பன் சங்க ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டுறவுத் துறையின் சேவைகளை முழுமையாக அறிந்துகொள்வதற்கு ஏதுவாக கூட்டுறவு என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.

You May Also Like

More From Author