இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

Estimated read time 1 min read

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை சார்ந்த பட்டப்படிப்புகள் மாண்வர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விண்ணப்பித்து பல்வேறு படிப்புகளுக்கு அதற்கென நுழைவு தேர்வுகள் எழுதி ஐஐடியில் சேர்ந்து படிப்பதே பலருக்கு லட்சியமாக இருந்துள்ளது. அப்படியான ஐஐடியில் தற்போது இசைக்கென தனி உயர் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இசை மற்றும் இசை தெராபி :

இந்த இசைக்கான உயர் பட்டப்படிப்பு ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி ஐஐடி பல்கலைக்கழகத்தில் இசைக்கான MS மற்றும் PhD படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இசை மற்றும் இசை தெராபி (Musopathy) படிப்புகள் இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 15 கடைசி தேதி…

இந்த பட்டபடிப்புகளை இந்திய அறிவு அமைப்பு மற்றும் மனநலப் பயன்பாட்டிற்கான மையம் (IKSHMA) இந்த படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் iksmha.iitmandi.ac.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தை தொடர்பு கொண்டு ஜூலை 15ஆம் தேதிக்குள் இந்த வருட படிப்பிற்கு விண்ணப்பம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற விவரங்கள் :

இந்த படிப்பை முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளை ஆன்லைன் மூலமாகவும் சேர்ந்து அதன் மூலமும் படித்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த படிப்புகளானது, இசையின் வளர்ச்சி மற்றும் அதனை புரிந்து கொண்டு அர்த்தமுள்ள பங்களிப்பாக (இசை தெராபி) வழங்கக்கூடிய தாக மாற்றவும், இசை நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது.

வேலை வாய்ப்புகள் :

இந்த படிப்பில் சேரும் மாணவர்கள் பாரம்பரிய, பிரபலமான மற்றும் திரைப்பட இசைத் தொழில்களில் மட்டுமல்லாமல், இசைப் பதிவு மற்றும் இசை வல்லுநர்கள் உட்பட, ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறைகளிலும் கணிசமான அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

பாடத்திட்ட குழு :

இந்த பட்டபடிப்புகளுக்கான படத்திட்டங்களை, பத்ம விபூஷண் விருது பெற்ற டாக்டர் சோனல் மான்சிங், தாள வாத்திய கலைஞர் பேராசிரியர் திருச்சி சங்கரன், கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் கெளதம் தேசிராஜு உள்ளிட்டோர் இணைந்து உருவாக்கியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author