உலகில் ஒரே ஒரு சீனா தான் உள்ளது. தைவான் சீனாவின் ஒரு பகுதியாகும் என்று சீனாவின் தைவான் பிரதேசம் தொடர்பான ஜப்பானிய தலைமை அமைச்சர் சனாய் தகாய்ச்சியின் மோசமான கூற்றுகள் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சென்பின்ஹூவா 12ஆம் நாள் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ஜப்பானிய தலைவர் நாடாளுமன்றத்தில் தைவான் தொடர்பாக அதிர்ச்சி உண்டாக்கும் கூற்றுகளை வெளிப்படையாகத் தெரிவித்தது ஒரே சீனக் கொள்கையைக் கடுமையாக மீறியுள்ளது. சீன உள்விவகாரங்களில் மோசகமாகத் தலையிட்டுள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் ஜப்பானிய தரப்பிடம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. வரலாற்றிலிருந்து ஜப்பான் ஆழமாகத் தற்சோதனை செய்து இதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
