2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2024 இல் உலகக்கோப்பையை வென்ற பிறகு ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜேடேஜா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில், இளம் வீரர்களைக் கொண்ட இந்த புதிய அணி மகுடத்தைத் தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.
2026 டி20 உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
