கர்நாடகாவில் நள்ளிரவில் பயங்கரம்: பேருந்தும் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 9 பேர் பலி  

Estimated read time 1 min read

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில், தனியார் சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
ஹிரியூர் தாலுகா, கோர்லத்து கிராஸ் (Gorlathu Cross) அருகே தேசிய நெடுஞ்சாலை 48-ல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பெங்களூருவிலிருந்து ஷிமோகா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்து மீது, எதிரே வந்த லாரி நிலைதடுமாறி மோதியது.
ஹிரியூரிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த அந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பை தாண்டி வந்து பேருந்தின் மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்து காரணமாக அந்த நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You May Also Like

More From Author