கமலுடன் இணையும் வீரதீரசூரன் இயக்குனர் சு.அருண்குமார்  

Estimated read time 1 min read

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படத்திற்கு இயக்குநர் சு.அருண்குமாருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கமல் நடித்தும் தயாரித்தும் பங்களிக்கிறார்.
முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படம் எதிர்பார்ப்பைவிட பலத்த தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, கமல் தனது எதிர்வரும் படங்களில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, அடுத்ததாக சண்டை இயக்குனர்கள் இரட்டையரான அன்பறிவ் மாஸ்டர்களின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.
அந்த படம் தற்போது தயாரிப்பின் ஆரம்பகட்டத்தில் உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி, ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author