நாட்டின் வரி வசூல் வருமானத்தில் சீன தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு 50 விழுக்காட்டுக்கு மேல் இருப்பதோடு, அவற்றின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது 60 விழுக்காட்டுக்கு மேல் உள்ளது. இது பற்றி சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவில் 70 விழுக்காட்டுக்கு மேலான தொழில்நுட்ப புத்தாக்கச் சாதனைகள் சீன தனியார் நிறுவனங்களாலேயே படைக்கப்படுவதாகவும், நாட்டின் நகரப்புற வேலைவாய்ப்புகளில் 80விழுக்காட்டுக்கு மேலானவை அவற்றால் தீர்க்கப்டுவதாகவும் கூறினார். சீனாவில் உள்ள மொத்த நிறுவனங்களில் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை 90 விழுக்காட்டுக்கும் மேலாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆகையால் அதிசயத்தை படைத்த சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பினை புறக்கணிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
பொது உடைமை முறை சார் பொருளாதாரத்தை மையமாக கொண்ட சீன சோஷலியத்தில் அரசுசார் நிறுவனங்களுடன் சேர்ந்து தனியார் நிறுவனங்களும் சீனப் பாணி நவீனமயமாக்கலின் கட்டுமானத்தில் முக்கிய பங்களிப்புகளை வழங்கி வருகின்றன.
