சீன சர்வதேச அறிவுசார் தொடர்பு மன்றக் கூட்டம் நடைபெற்றது

சீன ஊடக குழுமமும் ஜியாங் சு மாநில அரசும் கூட்டாக நடத்திய 2024ஆம் ஆண்டு சீன சர்வதேச அறிவுசார் தொடர்பு மன்றக் கூட்டம் ஜியாங் சு மாநிலத்தின் வூ சி நகரில் நடைபெற்றது. சீன ஊடக குழுமத்தின் இயக்குநர் ஷேன் ஹாய்சியுங் இதில் உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், “புதிய தர உற்பத்தி ஆற்றலை வளர்ப்பது” பற்றி அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உத்தரவின் வழிகாட்டலுடன், நுண்ணறிவு பரவலில் தலைசிறந்த சாதனைகளை சீன ஊடக குழுமம் படைத்துள்ளது என்று தெரிவித்தார்.
சீன ஊடக குழுமம் நுண்ணறிவு பரவல் மூலம் சீன நவீனமயமாக்கம் பற்றிய கதைகளை சீராக பரவல் செய்து, நுண்ணறிவு மூலம் ஊடக சீர்திருத்தத்திற்கு வழிகாட்டி, புதிய தர உற்பத்தி ஆற்றலை, புதிய தர பரவல் ஆற்றலாகவும், ஊடக வழிகாட்டல் ஆற்றலாகவும் மாற்றி, நுண்ணறிவு பரவல் மூலம் பரிமாற்றத்துக்கான புதிய மேடையை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author