விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு காலையிலேயே இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது தங்களுடைய வீட்டின் அருகே கமலிக்கா என்ற 9 வயது சிறுமியும் ரிஷிகா என்ற 4 வயது சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கேட் சுவர் இடிந்து சிறுமிகள் மீது விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் இரு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
