விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வரும் அஜித் குமார் அதற்கு அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், விஜயின் அரசியல் வருகை ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில், அஜித்தின் அரசியல் குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பேட்டியளித்த பத்திரிக்கையாளர் வி கே சுந்தர் இதைப்பற்றி பேசியுள்ளார்.
அதாவது, ஜெயலலிதா அவர்களுக்கு அஜீத்தை மிகவும் பிடிக்கும் அஜித்தை எப்படியாவது அரசியலுக்குள் வர வைக்க வேண்டும் என தீவிரமாக இருந்தாராம். தனக்கு பின் தன்னுடைய இடத்தில் அஜித்தான் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆசையாக இருந்துள்ளது.
ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. ஜெயலலிதா எப்படி அஜித் மீது இவ்வளவு அளவு கடந்த அன்பை வைத்துள்ளாரே, அதே போல் அஜித்திற்கு ஜெயலலிதா மீது மிகப்பெரிய அன்பு இருக்கிறது.
ஜெயலலிதா இறந்த செய்தியை கேட்டு வெளிநாட்டில் இருந்த அஜித் இரண்டு Chartered விமானத்தை பிடித்து இங்கு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஒருவேளை ஜெயலலிதா ஆசைப்பட்டது போல் அன்றே அஜித் அரசியலுக்குள் வந்திருந்தால், இன்று அரசியலில் களம் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் விட அஜித்திற்கு பிரகாச பிரகாசமான அரசியல் வாய்ப்பு கிடைத்திருக்கும் என கூறியுள்ளார்.