அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் வெற்றி பெற்றார் ஜோ பைடன் 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் போட்டியிட உள்ளனர்.

ஜோ பைடன், ஜனநாயக கட்சியையும், டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர்.
ஏற்கனவே அவர்கள் இருவரும் தங்கள் கட்சிக்குள் தங்களுக்கு போட்டியாக இருந்த வேட்ப்பாளர்களை தோற்கடித்துவிட்டனர்.

மேலும், அதிபர் வேட்பாளர்களாக ஆவதற்குத் தேவையான பிரதிநிதிகளை அவர்கள் மிசிசிப்பி, வாஷிங்டன் மற்றும் ஜார்ஜியா மாநிலங்களில் பெற்றுள்ளனர்.

You May Also Like

More From Author