அமெரிக்காவின் எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது குறித்து முன்மொழிவதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான தனது பொது மோதலை தீவிரப்படுத்தினார்.
வியாழக்கிழமை (ஜூன் 5) எக்ஸ் தளத்தில் புதுக் கட்சி தொடங்குவது குறித்து எலான் மஸ்க் ஒரு கருத்துக்கணிப்பைத் தொடங்கினார்.
அவரைப் பின்தொடர்பவர்களிடம், உண்மையில் 80% மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியை நிறுவ வேண்டிய நேரம் இதுவா என்று கேட்டார்.
இந்த கருத்துக்கணிப்பு வைரலானது மற்றும் 4.1 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. அதில் 81% இந்த யோசனையை ஆதரித்துள்ளனர்.
தனிக்கட்சி தொடங்குவது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துக் கணிப்பைத் தொடங்கினர் எலான் மஸ்க்
