அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்வதற்கான ஈரானின் “புதிய சதி திட்டம்” ஒன்றை தங்களின் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வந்த தற்காலிகப் போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அதிபர் டிரம்ப்பை குறிவைத்து ஈரான் தீட்டியுள்ள ஒரு குறிப்பிட்ட சதி திட்டம் குறித்த உளவுத்துறை தகவல்களை இஸ்ரேல் வாஷிங்டனுடன் பகிர்ந்துள்ளதாக CNN ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப்பை படுகொலை செய்ய ஈரானின் புதிய சதி திட்டம்; அமெரிக்காவை எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை
