இந்தியாவின் ‘மோஸ்ட் எஜுகேட்டட்’ மனிதரின் அசாத்திய வரலாறு..!!! 

Estimated read time 1 min read

இந்தியாவின் மிக உயர்ந்த கல்வித் தகுதி கொண்ட நபராகக் கருதப்படுபவர் ஸ்ரீகாந்த் ஜிச்கர். நாக்பூரில் பிறந்த இவர், 1973 முதல் 1990 வரையிலான 17 ஆண்டுகளில் மட்டும் 20 பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மருத்துவம் (MBBS, MD), சட்டம், இதழியல், மேலாண்மை, சமஸ்கிருதம் எனப் பல்துறைகளிலும் வித்தகராக விளங்கிய இவர், சுமார் 42 பல்கலைக்கழகத் தேர்வுகளில் பங்கேற்றுத் தனது அபார அறிவாற்றலை நிரூபித்துள்ளார். இவரது பெயரில் பல தங்கப் பதக்கங்களும், லிம்கா புத்தக சாதனையும் இன்றும் நீடிக்கின்றன.

கல்வியில் மட்டுமின்றி அரசுப் பணியிலும் சாதனை படைத்த இவர், 1978-ல் ஐபிஎஸ் (IPS) அதிகாரியாகத் தேர்வானார். பின்னர் அதிலிருந்து விலகி மீண்டும் யுபிஎஸ்சி எழுதி ஐஏஎஸ் (IAS) அதிகாரியானார்.

மக்கள் சேவையில் ஆர்வம் கொண்டதால் ஐஏஎஸ் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதித்தார். இந்தியாவின் இளம் வயது எம்.எல்.ஏ-வாகத் தேர்வான ஜிச்கர், தனது 25 வயதிலேயே 14 அரசுத் துறைகளைக் கவனிக்கும் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வியக்க வைத்தார்.

இத்தகைய மாபெரும் அறிவாற்றல் கொண்ட மனிதர், கடந்த 2004-ல் தனது 49-வது வயதில் ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்தது இந்தியாவிற்கே ஒரு பேரிழப்பாக அமைந்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author