கூட்டணி தொடருமா…? பிரேமலதா விஜயகாந்த் பதில்…!! 

Estimated read time 0 min read

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே திமுக வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தற்போது அதிமுக கட்சியில் துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிவித்துள்ளார்.

அதன்படி மாநிலங்களவைத் தேர்தலில் அந்த கட்சியின் மூத்த தலைவர் இன்ப துரை மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இந்த அறிவிப்பை அதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது துணை பொதுச்செயலாளர் முனுசாமி தற்போதைக்கு அவர்களுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. ஆனால் 2026 ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் கண்டிப்பாக தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.

இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பதாவது, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் என 2024ல் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள். அப்போதே, ஒப்பந்தம் போடும் போது, எந்த ஆண்டில் என அதில் குறிப்பிடப்படவில்லை.

அப்போதே ஆண்டைக் குறிப்பிட்டு அளிக்க தெரிவித்தோம். ஆனால், ஆண்டு குறிப்பிட்டு அளிப்பது நடைமுறையில் இல்லை என அதிமுக தெரிவித்தது. 2026 தேர்தலை ஒட்டி மாநிலங்களவை சீட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே அந்த தேர்தலை ஒட்டிதான் எங்களின் அரசியல் நகர்வு இருக்கும்.

அதிமுக கூட்டணியில் தொடர்வோமா? என்பதை அடுத்தாண்டு ஜனவரி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம். அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்வதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author