நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து

பயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் கனடாவின் குற்றச்சாட்டுகள் சந்தேகம் அளிப்பதாக நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ‘ஐந்து-கண்கள்’ என்ற உளவுத்துறை கூட்டணியை நடத்தி வருகிறது.
நிஜ்ஜார் வழக்கு தொடர்பாக கனடாவிடம் இருந்து அந்த உளவுத்துறைக்கு சில முக்கிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது, அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியின் போது, அவர், இந்தியாவின் மீது குற்றம்சாட்டும் கனடாவின் ஆதாரங்கள் சந்தேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author