ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால், இந்திய பொருட்கள் மீதான வர்த்தக வரியை மேலும் உயர்த்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது ஏற்கனவே தள்ளாட்டத்தில் இருக்கும் இருநாட்டு வர்த்தக உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் புகழ்ந்தாலும், வர்த்தக ரீதியாக விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
“பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர். ஆனால் ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம். இந்தியா ஒத்துழைக்கவில்லை என்றால், மிக விரைவில் அவர்கள் மீது கூடுதல் வரிகளை எங்களால் விதிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் மீண்டும் இந்தியா மீது வரி விதிக்க டிரம்ப் திட்டமா?
